எரிவாயு விலை மீண்டும் உயர்வு - டிடிவி தினகரன் கண்டனம்.!
TTV Dhinakaran say gas cylinder issue
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர தொடங்கி இருப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இடிகுகுறித்து, அவரின் செய்திக்குறிப்பில், "பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை மீண்டும் உயர்த்த தொடங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.

இந்த விலை உயர்வால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமன்றி, ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மீண்டும் அரசின் கட்டுபாட்டிற்கே கொண்டு வரவேண்டும்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dhinakaran say gas cylinder issue