மன்னிப்பு கேட்க வேண்டியவர் ஈபிஎஸ் தான்.. செய்தியாளர்கள் சந்திப்பில் எகிறிய டிடிவி.!!
TTV dinakaran alleges EPS should be apologised
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 121வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளரை சந்தித்த அவர் "எனக்கும், சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. எங்கள் மூன்று பேரையும் அவர் குறிப்பிடவில்லை என்றால் எங்களுக்கு அவர் துரோகம் செய்துள்ளார் என்பது தெளிவாகிறது.
துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி தான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தான் உள்ளனர்.
நாடாளுமன்ற பொது தேர்தலில் கூட்டணி இல்லை என்றாலும் தனித்துப் போட்டியிட தயாராக உள்ளோம். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கோரி நடைபெறும் போராட்டங்களுக்கு அமமுகவின் ஆதரவும் உண்டு. அண்ணாமலை வெளியிட உள்ள DMK Files2வை அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்." என என்ன செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
TTV dinakaran alleges EPS should be apologised