சுங்கக் கட்டணங்களை உயர்த்தி மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம்? டிடிவி தினகரன் காட்டம்.!! - Seithipunal
Seithipunal


மத்திய நெடுஞ்சாலைத் துறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்க சாவடிகளில் கட்டணத்தை உயர்கிறது. அதன்படி சென்னை வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ரூபாய் 10 முதல் ரூபாய் 40 வரை கட்டணத்தை உயர்த்த போவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. 

சுங்க கட்டண உயர்வுக்கு மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், 

உரிமம் காலாவதியான சுங்கச் சாவடிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சுங்கச் சாவடி கட்டணங்களை உயர்த்திருப்பது மோசமான நடவடிக்கையாகும். பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம்? 

மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி சுங்கக் கட்டண உயர்வை கைவிடுவதுடன், காலாவதியான சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dinakaran says about Tolgate Price Rises


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->