குஷியோ குஷி!!! 'இட்லி கடை' புதிய ரிலீஸ் டேட் - ஆகாஷ் பாஸ்கரன்
Idli Kadai new release date soon Akash Bhaskaran
பிரபல நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'பவர் பாண்டி, ராயன்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் ஈர்த்தது. அடுத்ததாக இவரது இயக்கத்தில் உருவாகி இருந்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.

இது தனுஷின் 52வது திரைப்படமாகும்.அவரே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் மற்றும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இதில் நடிகை நித்யாமேனன் தனுஷுக்கு ஜோடியாக இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே இட்லி கடை திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், "நித்யா மேனன், அருண் விஜய், ராஜ் கிரண் ஆகிய நடிகர்களின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையவில்லை.
இன்னும் 10 % படப்பிடிப்புகள் மீதமுள்ளது. நல்ல படத்தை அவசர அவசரமாக வெளியிட வேண்டாம் என நினைக்கிறோம். எனவே விரைவில் இன்னும் 10 நாட்களுக்குள் இட்லி கடை படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Idli Kadai new release date soon Akash Bhaskaran