நாக்பூர் வன்முறை: கலவரக்காரர்களிடமிருந்து வசூலிக்க முடிவு – முதல்வர் பட்னாவிஸ் அதிரடி!
Maharashtra Nagpur Clash CM Announced
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் முகலாய அரசர் அவுரங்கசீப் சமாதியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல், இரு சமூகங்களுக்கு இடையே வன்முறையாக வெடித்தது. இதில் 38 பேர் காயமடைந்தனர், நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன
இந்த நிலையில், நாக்பூரில் வெடித்த வன்முறையின் போது சேதமடைந்த சொத்துகளுக்கான இழப்பீட்டை, கலவரத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து நேரடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வன்முறையில் ஈடுபட்ட 104 பேர் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 12 சிறார்கள் உட்பட 92 பேர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பிரதமர் நரேந்திர மோடியின் மும்பை வருகை திட்டத்தில் எந்த பாதிப்பும் இருக்காது” என்று தெரிவித்தார்.
மேலும், “சேதமடைந்த சொத்துகளுக்கான தொகையை கலவரக்காரர்களிடமிருந்து நேரடியாக வசூலிக்கப்படும். செலுத்த மறுத்தால், அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, ஏலத்தில் விற்று அந்த தொகையை ஈடுசெய்வோம். காவல்துறையினரை தாக்கியவர்களுக்கு கடும் தண்டனை உறுதி செய்யப்படும்” என அவர் உறுதியளித்தார்.
விசாரணை, கைது மற்றும் ஊரடங்கு:
இதுவரை 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகரின் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர் என நாக்பூர் காவல் ஆணையர் ரவீந்திர குமார் சிங்கால் தெரிவித்தார்.
English Summary
Maharashtra Nagpur Clash CM Announced