கொல்கத்தாவில் தொடங்கிய ஐபிஎல் போட்டி; அரை சதம் அடித்து, ரஹானே ருத்ரதாண்டவம்..! - Seithipunal
Seithipunal


இந்திய உள்ளூர் போட்டியான ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் 08-வது சீசன் இன்று தொடங்கியுள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த தொடக்க நிகழ்வில், ஸ்ரேயா கோஷல், தீஷா பதானி உள்ளிட்டோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இன்று கோலாகலமாக தொடங்கிய போட்டியில் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பாடல் பாடி அசத்தினார். அதைத் தொடர்ந்து, நடிகை திஷா பதானி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில், கோல்கட்டா அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கானும் கலந்து கொண்டார். அவருடன் நட்சத்திர வீரர் விராட் கோலி நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து, இரு அணியின் கேப்டன்களும் கோப்பையுடன் வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர். பின்னர், நடைபெற்ற டாஸ் நிகழ்வில், பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இரு அணிகளும் இதுவரையில் 34 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 20 போட்டிகளில் கோல்கட்டாவும், 14 போட்டிகளில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றது. எனவே, இந்த சீசனில் யார் வெற்றியுடன் தொடங்குவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், 07 ஓவர்கள் நிலையில், கொல்கத்தா 03 விக்கட்டினை இழந்து, 110 ஓட்டங்களை பெற்றுள்ளது. அணியின் கேப்டன் ரஹானே அதிரடியாக ஆடி, அரைசதம் கடந்து, 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி 20 போட்டியில் இவரது 31 அரைசதமாகும். மறுபுறம் சுனில் நரேன் அதிரடி காட்டி 44 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்துள்ளார். இன்றைய போட்டியில் 100 வது சிக்ஸ்-ஐ அடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The IPL match started in Kolkata Rahane scores a half century


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->