தமிழக அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்தது - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
tungsten madurai CM Stalin
மதுரையில் டங்ஸ்டன் திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மதுரை மேலூர் அடுத்த அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து அரிட்டாப்பட்டி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்!
சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது!
இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது" என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
tungsten madurai CM Stalin