விஜய் பிறந்த நாளன்று தவெக - வினர் செய்த நெகிழ்ச்சி செயல்..! - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் விஜயின் 50 ஆவது பிறந்தநாள் நேற்று (ஜூன் 22) கொண்டாடப் பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விஜயின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமக நலத் திட்ட உதவிகள் செய்து கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று மதுரையைச் சேர்ந்த விஜயின் ரசிகரும், தவெக நிர்வாகியுமான சதீஷ், மதுரையில் உள்ள ஆதரவற்ற நாய்களுக்கு உணவிட்டுள்ளார். அதன்படி மதுரை அவனியாபுரம் அருகே உள்ள ஈச்சனேரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நாய்கள் காப்பகத்திற்கு சென்ற சதீஷ், அங்குள்ள நாய்களுக்கு அசைவ உணவினை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், " முன்பு கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் ஆதரவற்றோருக்கு உணவளிப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்தனர். ஆனால் கொரோனாவுக்கு பிறகு இந்த வாயில்லா ஜீவன்கள் உணவில்லாமல் மிகவும் கஷ்டப் படுகின்றன. எனவே தான் தலைவர் விஜயின் பிறந்தநாளைக் கொண்டாடும் பொருட்டு இந்த ஆதரவற்ற ஜீவன்களை பராமரித்து வரும் காப்பகத்திற்கு சென்று அசைவ உணவளித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவம் காரணமாக இந்த ஆண்டு தனது பிறந்த நாளை தவெக நிர்வாகிகள் யாரும் கொண்டாட வேண்டாம் என்று விஜய் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் நலத் திட்ட உதவிகள் வழங்குவது, ரத்த தானம் உள்ளிட்ட விஷயங்களை செய்து விஜயின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் ஆதரவற்ற வாயில்லா ஜீவன்களுக்கு விஜய் ரசிகர் ஒருவர் உணவளித்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Admins done a Amazing Things On Vijays Birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->