பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை! த.வெ.க அல் அமீன் கைது!
TVK Al ameen arrested POCSO
வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி இடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஒருவர் போக்கஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அல் அமீன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அல் அமீன், சமீபத்தில் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். இந்நிலையில், இவர் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அல் அமீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த 30 நாட்களாக தலைமறைவாக இருந்த அல் அமினை இன்று தான் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரை புகைப்படம் எடுக்கவிடாமல் போலீசார் தடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
English Summary
TVK Al ameen arrested POCSO