தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!
TVK Anand arrested
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று எழுதியுள்ள கடிதத்தில், "எனதருமை தங்கைகளுக்கும், தாய்மார்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் அனைத்து வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக நான் மன அழுத்தத்திற்கும், சொல்லொணா வேதனைக்கும் ஆளாகியுள்ளேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை யாரும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனில்லை என்பதாலேயே இந்த கடிதம்.
பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்" என்று விஜய் தெரிவித்து இருந்தார்.
விஜயின் இந்த கடிதத்தித்த நகலெடுத்து சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மாணவிகளுக்கு கொடுக்க முயன்ற தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த பெண் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்ட கடிதத்தை துண்டு பிரசுராமாக அக்கட்சியினர் வழங்கி வந்ததை பார்வையிட புஸ்ஸி ஆனந்த் வந்தார்.
அப்போது, முன் அனுமதி பெறாமல் கூட்டம் கூடியதற்காக புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.