தவெக சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா - ஏற்பாடுகள் தீவிரம்..! - Seithipunal
Seithipunal


விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப் பட்டது.

இந்நிலையில் இந்த விழா வரும் ஜூன் 28 மற்றும் ஜூலை 3 ஆகிய இரண்டு நாட்கள் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசினை வழங்கி சிறப்பிக்க உள்ளார். 

இதையடுத்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இந்த விழாவிற்கு எங்கிருந்து யார் எல்லாம் வருகிறார்கள் என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இவ்விழாவில் பெற்றோருடன் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளை அழைத்து வரும் மாவட்ட நிர்வாகிகளுக்கு தவெக சார்பில் வழிகாட்டும் நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. 

முன்னதாக இவ்விழாவில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு 'பார்கோட்' உள்ள நுழைவுக் கூப்பன் வழங்கப் பட்டுள்ளது. அதில் குறிப்பிடப் பட்டவர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொள்ள அனுமதி உண்டு. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களை தயார் செய்து கொள்வதற்காக தவெக சார்பில் இரண்டு மண்டபங்கள் ஒதுக்கப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Appreciation Event For Students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->