தவெக - காங்கிரஸ் விரைவில் கூட்டணி?....செல்வப்பெருந்தகை OPEN TALK! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளிப்படையாக கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தென்காசியில் செய்தியாள பேசினார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்கிறீர்கள்; காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவவதாகவும், தற்போது இந்தியா கூட்டணி ஒற்றுமையுடனும் வலிமையாகவும் உள்ளதாக தெரிவித்தார்.

எதிர் வரும் காலங்களிலும் காங்கிரஸ் கட்சி எங்கு உள்ளதோ, அந்த கூட்டணி வெற்றி பெறும் என்றும், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்று வெளிப்படையாக கூறினார். மேலும், தஞ்சாவூரில்  அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜய், இந்தியா கூட்டணியில் உள்ள திமுக கட்சியை தாக்கி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tvk congress alliance soon selvaperundagai open talk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->