தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்! முக்கிய அப்டேட் அதிகாரபூர்வமாக வெளியானது!
TVK General Committee meet
சென்னை, மார்ச் 28: நடிகர் விஜய் தலைமையில் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 28ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறுகிறது.

இதற்கான பணிகளை விரைவுபடுத்த, தவெக சார்பில் முக்கிய ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரவேற்புக் குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மைக் குழு, தொழில்நுட்ப குழு, மற்றும் பிற ஏற்பாட்டு குழுக்கள், கூட்டத்தினை சிறப்பாக நடத்த முழு கவனத்துடன் செயல்பட்டு வருகின்றன.
கூட்டத் திட்டங்கள் & அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், கூட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார். கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்படும் இந்த கூட்டம், தவெகத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்களை அறிவிக்கும் கூட்டமாக அமையும் என்று சொல்லப்படுகிறது.
English Summary
TVK General Committee meet