மூதாட்டியை பிடிக்க தனிப்படையா? வைரலாகும் வீடியோ! கொந்தளிப்பில் திமுகவினர்! தவெக தரப்பில் போட்ட டிவிட்!
TVK Loyola mani condemn to Viral Video old lady
மெட்ரோ ரயில் தூணில் ஒட்டப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பு, கல், மண் வீசிய மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டி செருப்பு,கல், மண் வீசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், திமுக எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். மேலும் மூதாட்டியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த லயோலா மணி இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "இந்த ஆட்சி சாமானிய மக்களுக்கும் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது போன்று முதல்வர் ஸ்டாலின் போஸ்டர் மீது மூதாட்டி ஒருவர் கல், மண், செருப்பு வீசும் நிலையில் உள்ளது.
அனைத்து பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லிவிட்டு தராமல் ஏமாற்றிய விரக்தியில் செருப்பு,கல், மண் எறிந்தாரா?
அல்லது
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதை நினைத்து கோவப்பட்டு செருப்பு,கல், மண் எறிந்தாரா?
அல்லது
சட்ட ஒழுங்கு சந்தி சிரிப்பதை பார்த்து செருப்பு,கல், மண் எறிந்தாரா?
அல்லது
ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய் சொன்னதால் ஆத்திரப்பட்டு செருப்பு,கல், மண் எறிந்தாரா? என்று பல கோணங்களில் யோசித்து வருகிறேன்.
கல், மண், செருப்பு எறிந்தது தவறு. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அந்த மூதாட்டியை கைது செய்ய முனைப்பு காட்டும் இந்த காவல்துறை தயவு செய்து வேங்கை வயலில் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்தது யார் என்று கண்டுப்பிடிக்க முனைப்பு காட்டாமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
TVK Loyola mani condemn to Viral Video old lady