வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தவெக விஜய் வழக்கு..!
TVK Vijay case in the Supreme Court against the Waqf Board Amendment Act
வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளன.
வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதாகக் கூறி, வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சட்டம் அமலில் வந்துள்ளது.

இந்த வக்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, "ஜனநாயகத்திற்கு விரோதமான வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எட்ன்றும், மத்திய அரசு இதனைச் செய்யாத பட்சத்தில், இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து அவர்களின் வக்பு உரிமை சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்றுப் போராடும் என்று விஜய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
TVK Vijay case in the Supreme Court against the Waqf Board Amendment Act