கொந்தளிக்கும் விஜய் தொண்டர்கள்! மீண்டும், மீண்டும் கொச்சைப்படுத்தும் திமுக நடிகர்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் தங்களது அரசியல் எதிரிகளாக திமுக, பாஜக தான் என்று தெளிவாக விஜய் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், விஜயின் அரசியல் கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் குறித்த கருத்துக்கு, திமுக நிர்வாகி நடிகர் போஸ் வெங்கட், "உன் கூடவுமா அரசியல் பண்ணனுமா" என்று விமர்சித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. 😁😁😁" என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விஜய் அரசியல் வருகை குறித்து திமுக நிர்வாகி நடிகர் போஸ் வெங்கட் தெரிவிக்கையில், "கோட் படத்தை 4 முறை பார்த்தேன். அதற்காக நாங்க யாரும் விஜய்க்கு ஓட்டு போட போவதில்லை.

அவர் ஒரு சிறந்த நடிகர், சிறந்த ஹீரோ. விஜய் ஹீரோவாக நடித்துக் கொண்டே அரசியல் பணிகளை மேற்கொள்ளலாம். அரசியலில் பல கோடிகள் செலவாகும். 

ஒரு மாநாடு நடத்த 70 கோடியாகும், இப்படியாக ஒரு 4 மாநாடு நடத்தி காசு இல்லாமல் போனால்... எனவே, விஜய் நடித்துக் கொண்டே அரசியல் பணிகளை செய்திருக்கலாம்" என்று போஸ் வெங்கட் தெரிவித்திருந்தார்.

அண்மையில், கங்குவா பாடல் வெளியீட்டு விழாவில் கூட, "நடிகர் சூர்யாவை அரசியலுக்கு வாங்க" என்று அழைத்த போஸ் வெங்கட், நடிகர் விஜய் குறித்து மறைமுகமாக, மிக மோசமாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

போஸ் வெங்கட்டின் இந்த விமர்சனங்களுக்கு விஜய் கட்சி தொண்டர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Vijay Manadu Vijay Speech DMK side actor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->