நாளை தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
TVK Vijay Meet jan 10
நாளை தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்திற்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மாவட்ட செயலாளர்களை பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
த.வெ.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் அணி தலைவர்கள் நாளை இறுதியாக முடிவு செய்யப்படவுள்ளனர்.
இதற்காக, மாவட்ட செயலாளர்கள் வாக்கெடுப்பு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் எனும் விகிதலில் மொத்தம் 117 மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.