GOAT: வேண்டாம் தம்பி... கூடுதல் பொறுப்போடு நடந்துக்கங்க - நடிகர் விஜய் போட்ட உத்தரவு?! - Seithipunal
Seithipunal


நாளை மறுநாள் நடிகர் விஜயின் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகராக மட்டுமல்லாமல், ஒரு அரசியல் கட்சியின் தலைவராக நடிகர் விஜய் நடித்து உள்ள இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் அரசியல் ரீதியான தனது கொள்கை, கோட்பாடுகளை விஜய் இணைத்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார். அதன் பிறகு முழுநேர அரசியல்வாதியாக விஜய் களமிறங்க உள்ளார்.

அவரின் திரையுலக வாழ்க்கையில் கடைசி படத்துக்கு முந்திய படம் இந்த கோட் படம் அமைந்துள்ளது. 

இந்த நிலையில், கோட் திரைப்படம் திரைக்கு வரும் போது, மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என்று, ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. 

அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதால் ரசிகர்களும், தொண்டர்களும் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று, நடிகர் விஜய் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Vijay Order to fans GOAT Movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->