ஜெ. மரண வழக்கு: அதிர்ச்சி மர்மங்கள்.! சிகிச்சைகளை தடுத்து, வேடிக்கை பார்த்த கொடுமை.!  - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016 இல் டிசம்பர் மாதத்தில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதியான ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆறுமுகசாமி ஆணையம் 608 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், பல்வேறு தெளிக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, சசிகலா, கே எஸ் சிவகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். 

இத்தகைய சூழலில் அந்த அறிக்கையின் படி, "ஜெயலலிதா மோசமான நிலையில் இருந்து அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டபோதும் அதை மறைத்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் பிரதாப் சி.ரெட்டி ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த உண்மை தகவல்களை ஊடகங்களிடம் தெரிவிக்காமல் கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். 

ரிச்சர் பீலே வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க தயார் என்று கூறிய போதும் அது பற்றிய முடிவுகள் எடுக்கப்படவில்லை. ஆஞ்சியோ செய்து கொள்வதற்காக ஜெயலலிதாவை ஷமீன் ஷர்மா சம்மதிக்க வைத்தார். ஆனால், அவருக்கு சிகிச்சை நடைபெறவில்லை. 

இங்கிலாந்து மருத்துவர் கொடுத்த வாய்வழி கருத்தை மற்றும் எடுத்துக்கொண்டு இதய அறுவை சிகிச்சை வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்ற அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்று இருந்தால் அவர் உயிரிழந்திருக்க மாட்டார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twist in jayalalitha death issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->