சட்டப்பேரவை தலைவருக்கு எதிராக.. உச்ச நீதிமன்றத்தை நாடும் உத்தவ் தாக்கரே.!!
Uddhav team move sc against Maharashtra speaker
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தலைவர் ராகுல் நார்வேகரின் முடிவை எதிர்த்து இன்று உச்சநீதிமன்றத்தில் உத்வ் தாக்கரை அணி மனு தாக்கல் செய்துள்ளது. சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற தலைமையிலான 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரி உத்தவ் தாக்கரே அணியின் கோரிக்கையை மகாராஷ்டிரா சட்டப்பேரவை தலைவர் கடந்த ஜனவரி 10ஆம் தேதி நிராகரித்தார். மேலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா என அறிவித்தார்.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தலைவரின் இந்த முடிவை எதிர்த்து சிவ சேனா தலைமையிலான உத்தர் தாக்குரே அணியினர் இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக சட்டப்பேரவை தலைவர் ராகுல் நர்வேகர் தனது முடிவை அறிவிப்பதற்கு முன்பு கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இல்லத்திற்கு சென்று வந்தது கடும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில் இன்று அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
English Summary
Uddhav team move sc against Maharashtra speaker