இடைப்பட்ட நாட்களில் இந்திய வரலாற்றை மாற்றியது யார்.? உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வரும் ஜனவரி 26 தேதி தில்லியில் நடைபெறுகின்ற குடியரசு நாள் அணிவகுப்பில் இடம் பெறுவதற்கான தமிழக அரசு ஊர்தியில் பாரதியார், வ.உ.சி., வேலு நாச்சியார் படங்கள் இடம் பெறத் தமிழக அரசு முடிவு செய்து, ஒன்றிய அரசின் கவனத்திற்கு அனுப்பி இருந்தது. ஆனால் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு நேற்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் "வேலு நாச்சியாரின் வீரத்தை வணங்கி கடந்த 3ம் தேதி ட்வீட் செய்தார் மோடி அவர்கள். நேற்று, வ.உ.சி-வேலு நாச்சியார் திருவுருவம் இடம்பெற்ற குடியரசு தின அணிவகுப்புக்கான தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு.இடைப்பட்ட நாட்களில் இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றியது யார்?" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi Stalin speech about republic day parade


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->