உக்ரைனில் இருந்து இத்தனை லட்சம் பேர் அகதிகளா? ஐநா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை.! - Seithipunal
Seithipunal


ரஷ்ய நாடு தொடுத்துள்ள போரினால் 3 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

போர் நடைபெற்று வரும் கடந்த நான்கு நாட்களில் மட்டும், உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 லட்சத்து 68 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான போலந்து, மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று, சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் நாடு முறையீடு செய்துள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருப்பதாக அந்நாட்டு அதிபர் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அளித்துள்ள மனுவில், "உக்ரைன் நாட்டில் இனப்படுகொலை நடப்பதாக ஒரு போலியான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து, ரஷ்யா போருக்கு வழிவகுத்து உள்ளது" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மனு மீதான விசாரணை, அடுத்த வாரம் நடைபெறும் என்று உக்ரைன் அதிபர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN say about Ukraine Refugees Count


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->