மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்தார்; கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு..!
Union Home Minister Amit Shah arrives in Chennai
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றிரவு 11.15 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.
டில்லியில் இருந்து நேற்றிரவு 10:20 மணியளவில், தனி விமானத்தில் புறப்பட்ட அமித்ஷா சென்னை வந்தநிலையில், வானதி ஸ்ரீநிவாசன், முருகன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர், இன்று காலை முதல் மாலை வரை, தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களுடன், அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அத்துடன் அவர், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசவும், அமித்ஷா திட்டமிட்டுள்ளார். மேலும், மாலையில், மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் வருகைத்தவுள்ளனர். அவர்களுடனும் அவர் அங்கு ஆலோசனை நடத்தூவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Union Home Minister Amit Shah arrives in Chennai