"செங்கோல்.. நீதியின் சின்னம்.. தமிழர்களின் மானம்.." - மத்திய அமைச்சர் எல். முருகன் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


இந்திய பாராளுமன்றத்தில் தமிழர்களின் பாரம்பரிய சின்னமான 'செங்கோல்' பிரதமர் மோடியால் வைக்கப் பட்டது. இதை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று சமாஜ்வாடி எம். பி. ஆர். கே. சவுத்ரி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். 

அந்த கடிதத்தில் செங்கோல் என்பது மன்னராட்சியின் அடையாளம் என்றும், மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அது தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு காங்கிரஸ் எம். பி. மாணிக்கம் தாகூர் மற்றும் திமுக எம். பி. க்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் எல். முருகன், " ராஜாஜி ஆலோசனையின் பேரில் தான் தமிழகத்தில் இருந்து செங்கோல் கொண்டு சென்று ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப் பட்டது. 

தமிழர்களின் மானமான செங்கோலை காங்கிரஸ் ஒதுக்கி வைத்து விட்டது. இந்தியா கூட்டணியினர் நீதியின் சின்னமான இந்த செங்கோலை அகற்றக் கூறி சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எங்கோ ஒரு  அருங்காட்சியகத்தில் இருந்ததை பிரதமர் மோடி தான் பாராளுமன்றத்தில் வைத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்தியா சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் கவர்னர் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப் பட்ட செங்கோலின் மூலம் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Minister L Murugan Speaks About Scepter in Parliament


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->