நாட்டு மக்களை பாஜக புரிந்துகொள்ளவில்லை - ராகுல் காந்தி விமர்சனம்! - Seithipunal
Seithipunal


நாட்டு மக்களை பாஜக புரிந்துகொள்ளவில்லை. பாஜக மொழியின் மூலம் நாட்டில் பிளவை ஏற்படுத்த நினைக்கிறது. இந்திய மக்கள் ஒருநாளும் பாஜகவிற்கு அச்சப்படமாட்டார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் ஒற்றுமை பயணத் தொடக்க விழா நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,

"மூன்று கடலும் சங்கமிக்கும் இடத்தில் இந்தியாவின் ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசியக் கொடி வெறும் துணி மட்டுமல்ல. அதைவிட மேலானது. தேசியக் கொடி நமக்கு எளிதாக கிடைக்கவில்லை. அது இந்திய மக்களின் போராட்டத்தால் மீட்டெடுக்கப்பட்டது.

இந்திய மொழிகளை தேசியக் கொடி பிரதிநிதித்துவப்படுத்துகிறது.  தேசியக் கொடி ஒரு மாநிலத்திற்கோ, மதத்திற்கோ, மொழிக்கோ, சாதிக்கோ, சொந்தமானதல்ல. இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமானது. ஒவ்வொரு இந்தியரின் அடையாளமாகவும் தேசியக் கொடி உள்ளது.

தேசியக் கொடி ஒவ்வொரு குடிமக்களுக்கான உரிமையை, கலாசாரத்தை, பண்பாட்டை பாதுகாக்கிறது. தற்போது தேசியக் கொடி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். அவர்கள் இந்தியர்களை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை.

பாஜக மொழியின் மூலம் நாட்டில் பிளவை ஏற்படுத்த நினைக்கிறது. இந்திய மக்கள் ஒருநாளும் பாஜகவிற்கு அச்சப்படமாட்டார்கள். தொலைக்காட்சியில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேசமாட்டார்கள். பிரதமர் முகத்தை மட்டும் தான் ஒளிபரப்புவார்கள்". என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Unity tour inaugural function spoke rahul gandhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->