மருமகனை கட்சியிலிருந்து நீக்கிய மாயாவதி! பின்னணியில் மாமனார் செய்த சம்பவம்!
UP BSP Mayavathi Party issue
பகுஜன் சமாஜ் கட்சி (BSP) தலைவர் மாயாவதி, தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாகவும் அறிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சிநிறுவனர் கன்ஷி ராம் கட்சியில் வாரிசு முறை அரசியலை ஏற்கப் போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தார்.
ஆனால், கடந்த 2023 டிசம்பரில் ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக அறிவித்த மாயாவதி, 2024 மே 7-ஆம் தேதி, அவர் ‘முதிர்ச்சி அடையும் வரை’ கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்.
பின்னர் மக்களவைத் தேர்தலில் கட்சி தோல்வியடைந்த பிறகு, மீண்டும் ஆகாஷ் ஆனந்தை அதே பதவியில் நியமித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆகாஷ் ஆனந்தை அணைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, தனது வாரிசு குறித்து இனி எந்த அறிவிப்பும் வெளியிட போவதில்லை என மாயாவதி உறுதி அளித்து உள்ளார்.
இதன் பின்னணி குறித்து வெளியான தகவலின் படி, கடந்த மாதம், ஆகாஷ் ஆனந்தின் அரசியல் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து மாமனார் அசோக் சித்தார்த் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கிய மாயாவதி, தற்போது தனது மருமகனையும் நீக்கி உள்ளார். மேலும் கட்சியின் எந்த உறவுக்கும் இனி வாய்ப்பு வழங்கப்போவதில்லை என்ற முடிவுக்கு மாயாவதி வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
English Summary
UP BSP Mayavathi Party issue