சிக்கலில் அகிலேஷ் யாதவ் & மனைவி! சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்!
UP Minor Girl abused Akhilesh Yadav Party
உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களோடு நெருங்கிய வட்டாரத்தில் இருந்த நவாப் சிங் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சமாஜ்வாதி கட்சியின் மொய்த்கான் என்பவர், பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களுடன் நெருக்கத்தில் இருந்த நவாப் சிங் யாதவ், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்த அன்று அதிகாலை 1:30 மணி அளவில், காவல்துறையின் அவசர எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் சிறுமி ஒருவர், தன்னை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்வதாக கூறி புகார் அளித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைவாக சென்று சிறுமியை மீட்டனர்.
மேலும் , நவாப் சிங் யாதவ் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் தரப்பிலிருந்து வெளியான தகவலின் படி, நவாப் சிங் யாதவ் வீட்டுக்கு, இந்த 15 வயது சிறுமி தனது அத்தையுடன் வேலைக்கு வந்துள்ளார். அப்போது நவாப் சிங் யாதவ் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகவும், இதனால் அந்த சிறுமி காவல்துறையின் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்டதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நவாப் சிங் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவிர்க்கு மிக நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. மேலும், அகிலேஷ் யாதவ் மனைவியும், மக்களவை உறுப்பினருமான டிம்பிள் யாதவின் உதவியாளராக இவர் பணிபுரிந்து வந்ததும் போலீசாரின் விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே, சமாஜ்வாஜி சமாஜ்வாதி கட்சியின் மொய்த்கான் என்பவரை, 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசார் கைது செய்த போது, அகிலேஷ் யாதவ் மிகவும் அருவருக்கத்தக்க ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தன. இந்த நிலையில், அகிலேஷ் யாதவிர்க்கு, அவரின் மனைவிக்கும் மிக நெருக்கமான ஒருவர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது, அவரின் கட்சிக்கு உத்திரபிரதேச மாநில மக்கள் மத்தியில் பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
UP Minor Girl abused Akhilesh Yadav Party