உலக அளவில் இந்துக்களை பாதுகாக்க அவசர நடவடிக்கை - பவன் கல்யாண்! - Seithipunal
Seithipunal


இந்துக்களைப் பாதுகாப்பதற்கு உலக அளவில்  அவசர நடவடிக்கை வேண்டும் என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து கோவில் மீதும் இந்துக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் வேதனை அளிப்பதாகவும், இது எச்சரிக்கை அளிக்கக் கூடியது என்று கூறியுள்ள அவர், கனடா அரசு இது குறித்து உடனடியாக தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், அங்குள்ள இந்து சமூகத்திற்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்றும்,  உலக அளவில் இந்துக்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இரக்கம் காட்ட வேண்டும் என்பதற்கான அழைப்பு இது இல்லை என்றும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான அழைப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும், பிற சமூகங்களுக்கு காட்ட வேண்டிய அதே வேகத்தையும் அர்ப்பணிப்பையும் பாதிக்கப்படும் இந்து சமூகத்திற்கும் உலகம் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Urgent action to protect hindus worldwide pawan kalyan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->