மணிப்பூரில் கேபினட் கூட்டத்திற்கு அவசர அழைப்பு! ...தொடர்ந்து நிலவும் பதற்றம்! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டிலிருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே நடைபெற்று வந்த வன்முறை பல மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில், திடீரென சமீபத்தில் வன்முறை மீண்டும் வெடித்தது. 

 

அதன்படி, மணிப்பூரில் உள்ள மேற்கு இம்பால் நகரில் கவுடிரக் பகுதியில் குகி பயங்கரவாதிகள் சிலர் கும்பலாக கூடி ராக்கெட்டுடன் கூடிய எறிகுண்டுகளை குவித்ததோடு உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஆளில்லா விமானங்களின் உதவியுடன் எறிகுண்டுகளை வீசி, துப்பாக்கி சூடு நடத்தினர். 

 

இதற்கிடையே மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் நேற்று ராக்கெட் குண்டு வீசப்பட்டதில், ஒருவர் உயிரிழந்தார்.

 

இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று காலை இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 5 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

 

இந்நிலையில், மணிப்பூரில் வன்முறை காரணமாக மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால். கேபினட் கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பைரேன் சிங் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Urgent call for cabinet meeting in manipur continuing tension


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->