பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விருப்பம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் அவரது ஆதரவாளர்களும் குற்றம் சாட்டியுள்ள நிலையில், நேற்று முன்தினம் அவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக நடத்திய போராட்டத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானார். 

இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,

"நாடாளுமன்றத்தினால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளோம்.

பாகிஸ்தானில் அமைதி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் பணியில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அரசுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளோம். ஆட்சி மாற்றம் குறித்து ஏறும் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல. 

ஜனநாயக கொள்கைகளை அமைதியாக நிலைநாட்டுவதை நாங்கள் ஆதரிக்கிறோம்". இவ்வாறு நைட் பிரைஸ் தான் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

USA support to Pakistan new pm


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->