முன்னாள் கோவா முதல்வர் மகன் தொகுதி நிலவரம்.! நன்றி கூறிய உத்பல் பாரிக்கர்.!  - Seithipunal
Seithipunal


முன்னாள் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனான உத்பல் பாரிக்கர் தனது தந்தையின் தொகுதியான பனாஜி தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். 

கோவாவின் முன்னாள் முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த பனாஜி தொகுதியில் அவரது மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் உத்பல் பாரிக்கர் சுயேச்சையாக போட்டியிட்டார். 

பாஜகவில் இருந்த மனோகர் பாரிக்கரின் மகனான அவருக்கு இந்த தொகுதியை பாஜக வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக வேறொரு வேட்பாளருக்கு அந்த தொகுதியை வழங்கியது. 

இந்த நிலையில் சுயேச்சையாக போட்டியிட்ட உத்பல் பாரிக்கர் தோல்வியை தழுவ பாஜக வேட்பாளரான அட்டனாசியோ மாந்செரேட் வெற்றி பெற்றார். 

இதுகுறித்து உத்பல் பாரிக்கர், "சுயேச்சை வேட்பாளராக நான் போட்டியிட்டது மிகவும் திருப்தியாக இருந்தது. ஆனால், முடிவில் ஏமாற்றம் இருந்தது. எனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

utpal parrikar constituency election results


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->