உத்தர பிரதேச இடைத்தேர்தல்!...5 காவலர்கள் அதிரடியாக சஸ்பெண்டு! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மீராபூர் உள்ளிட்ட  9 சட்டமன்ற தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

சில இடங்களில் மோதல் போக்கு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெற்றது. போலீசார் உடனடியாக அதனை தடுத்து நிறுத்தி வாக்குப்பதிவினை அமைதியாக நடத்த ஏற்பாடு செய்தனர்.

மீராபூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்ரோலி கிராமத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் வெடித்தது. இந்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கியது வாக்களித்து வந்தவர்களிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மீது உடனடியாக தடியடி நடத்திய போலீசார், அமைதியாக வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்தனர்.

இந்த சூழலில், மொராதாபாத் பகுதியில் உள்ள பைகான்பூர் மற்றும் மிலாக் சிரி ஆகிய கிராமங்களில் வாக்குச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வாக்காளர்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், 2 பெண் காவலர்கள் என் மொத்தம்  5 காவலர்களை  சஸ்பெண்டு செய்ததோடு, அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar pradesh by elections 5 police officers suspended


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->