40 எம்.எல்.ஏ.,க்களை இழக்கும் பாஜக.! அதிர்ச்சியில் தொண்டர்கள்.!
uttar pradesh election result 2022 bjp loss 40 seat
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து கொண்டு இருந்தது. பகல் 1.30 மணி தேர்தல் முன்னிலை நிலவரப்படி, பாஜக மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 269 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது.
மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில், கடந்த 37 ஆண்டுகளில் எந்த ஒரு கட்சியும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததாக வரலாறு இல்லை. அந்த வரலாற்றை இந்த தேர்தலின் மூலம் பாஜக முறியடித்து இரண்டாவது முறையாக அரியணை எறியுள்ளது
பாஜக இந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது என்றாலும், கடந்த 2017 சட்டமன்ற தேர்தலை ஒப்பிடும்போது பாஜகவிற்கு கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோயுள்ளது. அந்த 40 இடங்களை சமாஜ்வாதி கட்சி கைப்பற்ற உள்ளதாகவே தெரியவருகிறது.
கடந்த 2017 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சி 312 இடங்களை கைப்பற்றி அபார ஒரு வெற்றியைப் பெற்றது. சமாஜ்வாதி கட்சி 47 இடங்களையும், பகுஜன் சமாஜ்வாதி 19 இடங்களையும், காங்கிரஸ் கட்சியை 7 இடங்களையும் கைப்பற்றின.
இந்த நிலையில், தற்போதைய தேர்தல் முன்னிலை நிலவரப்படி பாஜக சுமார் 270 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது (269 இடங்களில் முன்னிலை). எப்படிப் பார்த்தாலும் தற்போது பாஜகவுக்கு இருக்கக்கூடிய 312 சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 40 எம்எல்ஏக்களை பாஜக இழந்துள்ளது.
English Summary
uttar pradesh election result 2022 bjp loss 40 seat