கள்ளக் காதலியுடன் தனிமையில் இருந்த கணவன்! கதவை உடைத்து வெளுத்து வாங்கிய மனைவி!!
Telangana Illegal Affair husband attacked wife relatives
தனது மனைவியிடமிருந்து கள்ளக் காதலியை காப்பாற்ற முயன்ற கணவனை, அவரது மனைவியின் உறவினர்கள் அடித்து வெளுக்கும் சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறி உள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் இணை ஆணையராகிய ஜானகிராமிற்கு திருமணமாகி கல்யாணி என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில் ஜானகிராம் அடிக்கடி போனில் யாருடனோ பேசி வருவதையும், அடிக்கடி வீட்டில் இருந்து காணாமல் போவதையும் மனைவி கவனித்துள்ளார். இதனால் கணவன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதியன்று வீட்டை விட்டு புறப்பட்ட ஜானகிராமை, அவரது மனைவி ரகசியமாக பின் தொடர்ந்துள்ளார்.
அப்போது வாராசிகுடாவில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில், ஜானகிராம் தன்னைவிட 20 வயது குறைவான ஒரு பெண்ணோடு இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. உடனே தனது உறவினர்களுக்கு கல்யாணி தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உறவினர்களும் அந்த அபார்ட்மெண்ட்டுக்குள் புகுந்தனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜானகிராம் தனது காதலியை காப்பாற்ற, குளியல் அறையில் பதுக்கி வைத்து விட்டு கதவின் முன் நின்றுள்ளார். ஒரு கட்டத்தில் கடுப்பான கல்யாணியின் உறவினர்களும், ஜானகிராமை அடித்து துவைத்தனர். பின்னர் குளியல் அறைக்குள் நுழைந்த கல்யாணி, பதுங்கி இருந்த காதலியையும் அடித்து துவைத்தார்.
இச்சம்பவம் அறிந்து வந்த வாராசிகுடா போலீசார் ஜானகிராமையும், அவரது காதலியையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
English Summary
Telangana Illegal Affair husband attacked wife relatives