#BigBreaking || எதிர்த்து நிற்க ஒரு அரசியல் கட்சியும் இல்லை.! ஒரே பேரூராட்சியின் 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி.!
vadukapatti election result
பெரியகுளம் அருகே மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சியின் 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்த்துப் போட்டியிட வேட்பாளர்கள் இன்றி, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வடுகப்பட்டி பேரூராட்சியின் 1வது வார்டு, 10வது வார்டு, 11 வது வார்டுகளில் 3 சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டதால், அந்த மூன்று பேரும் வெற்றி பெற்றதாக சட்டமன்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

1வது வார்டில் முத்துச்செல்வியும், 10 வது வார்டில் ஜெயராமனும், பதினோராவது வார்டில் விமலா என்பவரும் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இவர்கள் மூன்று போரையும் எதிர்த்து எந்த ஒரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், சற்று முன்பு இவர்கள் 3 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று வார்டுகளிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
English Summary
vadukapatti election result