'நான் பாலியல் தொழிலாளியா?..... உன்ன சும்மா விடமாட்டேன்!!!' - நடிகை சீமானை திட்டி குமுறல்....
actress scolds seeman that he should payback what he said
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்னையில் இருந்து புறப்பட்டார். அப்போது விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களுக்குப் பேட்டி ஒன்று அளித்தார். அந்தப் பேட்டியில், " சீமான் பேசுவதெல்லாம் கேட்டுக்கொண்டு அவரது கட்சியில் எப்படித்தான் இந்தப் பெண்களெல்லாம் இருக்கிறார்களோ? என்று திமுக எம்.பி கனிமொழி" கூறியிருப்பது தொடர்பாகவும், அவர் மீதான பாலியல் வழக்கு குறித்தும் தெளிவாகப் பதில் தெரிவித்திருந்தார்.

ஒருங்கிணைப்பாளர் சீமான்:
அவர் கூறியதாவது, " என்னைப் பாலியல் குற்றவாளி எனச் சொல்வதற்கு நீங்கள் யார்? நீங்கள் என்ன நீதிபதியா? என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்தான் பெண், அவருக்கு மட்டும்தான் மானம் இருக்கிறதா? அவருக்கு மட்டும் தான் காயம் படுமா? என் வீட்டில் பெண்கள் இல்லையா? என் தாய் என் சகோதரிகள் எல்லாம் பெண்கள் இல்லையா? என்னை நேசிக்கும் மனைவி இல்லையா?. அவர்களுக்கெல்லாம் நான் கேட்பதில் உங்களுக்குக் கண்ணியம் குறைந்துவிட்டது என்றால், நீங்கள் செய்யும் செயலுக்குப் பெயர் என்ன? என்னைப் பாலியல் குற்றவாளி என்று சொல்வதற்கு நீங்கள் யார்? அரசியல் ரீதியாக எதிர்கொள்ளப் பயந்து என்னைப் பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள்.
அவதூறு கிளப்புவதை நிறுத்துங்கள்:
வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, என்னை எப்படிக் குற்றவாளி எனக் கூற முடியும். என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு தொடர்ச்சியாக இது போன்ற அவதூறு கிளப்புவதை நிறுத்துங்கள். 'என்ஜாய்மென்ட் வித்அவுட் ரெஸ்பான்சிபிலிட்டி' என்று உங்களுக்குத் தலைவர் பெரியார் தான் சொல்லியுள்ளார். அதைத்தான் நானும் செய்துள்ளேன். அப்படிப் பார்த்தால் உங்கள் தலைவர் வழியில் நான் தான் நடந்துள்ளேன். இது எப்படித் தவறாகும் இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை வெளியிட்ட வீடியோ:
இந்நிலையில் செய்தியாளர்களிடம் சீமான் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "என்னுடைய கண்ணீர் உன்னைச் சும்மா விடாது. நீ இனி நன்றாக எடுக்க மாட்டாய் . நான் என்ன பாலியல் தொழிலாளியா? தொழிலாளியா?உன்னை என்ன செய்கிறேன் என்று பார்! " என்று அந்த வீடியோவில் நடிகை மனம் வருந்தி குமரலுடன் அழுது சீமானை திட்டியுள்ளார்.
English Summary
actress scolds seeman that he should payback what he said