செருப்பு தான் போடல.. ஜெயிலுக்கு ஒன்னும் போகலையே - அண்ணாமலை பதிலடி.!
bjp leader annamalai answer to senthil balaji
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக தலைவர் அண்ணாமலை சபதம் எடுக்கும் போது கொஞ்சம் யோசித்து எடுக்க வேண்டும். இனி அண்ணாமலையால் வாழ்நாள் முழுக்க செருப்பு அணிய முடியாது. உள்ளூரில் விலை போகாத ஆடு, நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டு தோல்வியடைந்ததாகவும் விமர்சித்தார்.

இந்த நிலையில், இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாது:- "செப்பல்தான் போடாமல் இருக்கிறேன். வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிவிட்டு மோசடி செய்து ஜெயிலுக்கு செல்லவில்லையே. ஜெயிலுக்கு செல்வதும், மீண்டும் அமைச்சர் பதவியில் அமருவதும் தான் தவறு. இதுகுறித்து உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்பியது.
மேடை போட்டு பாஜகவை திட்டுவது தான் திமுகவின் முழு நேர வேலையாக இருக்கிறது. அனைத்து கட்சி கூட்டம் எதற்கு..? ஏன் என்றே தெரியாமலே எப்படி அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும். தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது. இதில் கூட திமுக அரசியல் செய்கிறது. தி.மு.க.வினருக்கு மக்கள் பிரச்சனை குறித்து எந்த கவலையும் இல்லை.
மீனவர் பிரச்சனையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் புதிய அதிபர் வந்த பிறகு தான் கைது நடவடிக்கை அதிகமாகியுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார். விரைவில் இதற்கான தீர்வு எட்டப்படும்” என்றுத் தெரிவித்தார்.
English Summary
bjp leader annamalai answer to senthil balaji