#BREAKING || ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் உடன் ஆலோசனை செய்தது என்ன? வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


அதிமுக செயற்குழு பொதுக்குழு தீர்மானம் குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகைச்செல்வன் தெரிவித்ததாவது,

"தற்போது செயற்குழு, பொதுக்குழு தீர்மானம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் செய்யப்பட்ட தீர்மானம் இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. 

இந்த தீர்மானங்கள் முழுமையாக இறுதி வடிவம் பெற்ற பிறகு முறையாக பத்திரிகை சந்திப்பு அதிமுக தலைமை கழகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படும்.

ஒற்றை தலைமை குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. ஆலோசனையும் செய்யப்படவில்லை. தற்போது முக்கியமான தீர்மானங்கள், மக்களுக்கு தேவையான பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்யப்பட்டு வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழக அரசின் மக்கள் விரோத போக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

அதிமுக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில் இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையான இந்த தீர்மானம் நிறைவு பெற்ற பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் நாங்கள் தெரிவிப்போம்" என்று வைகை செல்வம் தெரிவித்தார்.

முன்னதாக, அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானத்தில் எதுவும் இல்லை. அது குறித்து விவாதம் செய்யவும் இல்லை என்று, அதிமுக மூத்த தலைவர் ஜே சி டி பிரபாகரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAIKAI SELVAM SAY ABOUT ADMK ONE MAN HEAD


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->