காவிரிப் பிரச்சினையில் தொடர்ந்து அலட்சியம் காட்டும் கர்நாடகா - தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல வைகோ வலியுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal



தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கூறிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு தொடர்ந்து அலட்சியப் படுத்தி வருவதால் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்லவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், " கடந்த ஜூன் 25ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31 ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் தமிழக அரசு, கர்நாடகாவில் தற்போது தென்மேற்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருவதால், அங்குள்ள 4 அணைகளிலும் ஜூன் 24ம் தேதி நிலவரப்படி, 27. 490 டிஎம்சி தண்ணீர் இருப்பில் உள்ளது. 

இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடந்த ஜூன் 24ம் தேதி வரை கர்நாடக அரசு, 1.985 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்து விட்டுள்ளது. இதனால் டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ். கே. ஹல்தர், "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதத்திற்கான நிலுவைத் தண்ணீரையும், ஜூலை மாதத்திற்கான தண்ணீரையும் சேர்த்து 36.607 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விடவேண்டும்" என்று தெரிவித்தார். 

மேலும் டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் கூட்டத்தில் ஜூலை 31ம் தேதி வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா, தமிழகத்திற்கு திறந்து விடவேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் இதை கர்நாடக அரசு அலட்சியப் படுத்திவிட்டு, அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளது. 

உச்ச நீதிமன்றமும், காவிரி மேலாண்மை வாரியமும் தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி வரும் நிலையிலும், கர்நாடக அரசு அதை அலட்சியப் படுத்தி வருகிறது. இதில் மத்திய அரசு தலையிட்டு கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்த வேண்டும். மேலும் கர்நாடகாவின் இந்த அநீதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko Empasising TN Govt To go To Supreme Court On Cauvery Issue


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->