பாஜகவின் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது.. வைகோ ஆவேசம்.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்புராயனை ஆதரித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ திருப்பூர் காந்தி நகரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர் "தமிழ்நாட்டை பாதுகாக்கவும் இந்தியாவை பாதுகாக்கவும் இண்டியா கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும். இந்துத்துவா மற்றும் சனாதன கூட்டத்திற்கு முடிவு கட்ட மக்கள் முடிவெடுத்து விட்டனர். 

நரேந்திர மோடி தமிழகத்திற்கு இந்த ஒரே ஆண்டில் ஒன்பது முறை வந்துவிட்டார். அவர் ஒன்பது முறை அல்ல 90 முறை வந்தாலும் பாஜக தோல்வி அடைவதை யாராலும் தடுக்க முடியாது. நரேந்திர மோடி கண்ணியமாக பேச வேண்டும். தமிழ்நாட்டு மக்களை புண்படும் வகையில் நடுநிலையாக பேசாமல் கடுமையாகப் பேசி வருகிறார்.

திராவிட இயக்கத்தை அழிப்பதாக நரேந்திர மோடி பேசி வருகிறார். பெரியார் திராவிட கழகத்தை, அண்ணா திமுகவை, எம்ஜிஆர் அதிமுகவை, நான் மதிமுகவை உருவாக்கியுள்ளேன். எங்களுக்குள் தகராறு இருக்கும் ஆனால் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது" என பேசி உள்ளார் வைகோ ஆவேசமாக.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko said No one can stop BJP's defeat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->