ஜெயலலிதா, கருணாநிதி; "கேடயமாவது சத்தியம்"- வைரமுத்துவின் அரசியல் ட்விட்.!! - Seithipunal
Seithipunal


திரைப்பட பாடல் ஆசிரியரும் கவிஞருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் "கலைஞருக்கும்,

அ.இ.அ.தி.முகவிலிருந்து தி.மு.கவில் வந்துசேர்ந்த ஒரு முக்கியப் புள்ளிக்கும்ந டந்த உரையாடல்,

எனக்கு வாய்மொழியாக வந்தது; தயக்கத்தோடு கலைஞரையே கேட்டு உறுதி செய்தது

சொற்கள் மாறியிருக்கலாம்‌; சொன்னபொருள் இதுதான்

‘வைரமுத்த ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’

‘ஏன்? எதனால?’

‘அவரு உங்களப் புகழ்ந்து பேசுறாரே தவிர ஜெயலலிதாவ எப்பவும்‌திட்ட மாட்டேங்குறாரு’

(கலைஞர் சிறு சிந்தனைக்குப் பிறகு)

‘நீ அங்க இருந்து இங்க வந்திருக்க, அங்க இருந்தபோது என்னத் திட்டுன;‌இங்க இருந்து அந்த அம்மாவத் திட்டுற

வைரமுத்து எப்பவும் இடம் மாறல ஜெயலலிதா வைரமுத்துக்கு எதிரியும் இல்ல

அவரு தமிழுக்காக நம்மகூட நிக்கிறாரு, இன்னொண்ணு அவரு யாரையும் திட்டமாட்டாரு; அது அவரு இயல்பு;

கோள் சொன்னவர் குறுகிப்போனார்

இப்படித்தான் கேடுகள் ஈட்டி எறியும்போதெல்லாம் கேடயமாவது சத்தியம்" என பதிவிட்டுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vairamuthu tweet about karunanidhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->