பெண்களின் தாலியை பறிக்கும் பாவக்கடலில் முதல்வர் தான் முதலில் மூழ்குவார்.!! - வானதி சீனிவாசன், பாஜக.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் பாதயாத்திரையை பாவயாத்திரை என விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த அவர் "திமுக ஒவ்வொரு நாளும் தமிழகத்திற்கு செய்யக்கூடிய பாவத்தை கணக்கிட்டால் பாவயாத்திரை என்ற வார்த்தையை கூட பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு நாளும் இங்கு இருக்கும் மாநில அரசு சட்டம் ஒழுங்கில் ஆரம்பித்து டாஸ்மாக் மூலம் வரை எத்தனை பெண்களின் தாலியை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தாலி பறிப்புக்கெல்லாம் பாவத்தை கணக்கிட்டால் அந்தப் பாவக்கடலில் மாநிலத்தின் முதலமைச்சர் தான் முதலில் மூழ்குவார்" என வானதி சீனிவாசன் காட்டமாக பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi response to MKStalin comment on annamalai padayatra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->