#BREAKING || வானதி சீனிவாசனுக்கு எதிராக ராகுல்காந்தி தொடர்ந்த வழக்கில். சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
VANATHI SRINIVASAN CASE JUEDMENT
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெற்றி செல்லும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை விட, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆயிரத்து 600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக கூறி, கோவை தெற்கு பகுதியை சேர்ந்த சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ராகுல் காந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், இந்த தேர்தல் வழக்கில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும், இவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்து, இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் வானதி சீனிவாசன் வெற்றி உறுதியாகிவிட்டது.
English Summary
VANATHI SRINIVASAN CASE JUEDMENT