குலத்தின், பிறப்பின் அடிப்படையில் “வாரிசு அரசியல்” செய்யும் திமுக - வானதி சீனிவாசன் பதிலடி! - Seithipunal
Seithipunal


பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "குலத்தின் அடிப்படையிலும், பிறப்பின் அடிப்படையிலும் மட்டுமே பதவிகளை வழங்கி, “வாரிசு அரசியல்” செய்யும் திமுக, நலிவடைந்த  பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டத்தின் மீதும் அதை ஆதரிப்பவர்கள் மீதும் சாதி சாயம் பூச முயல்வது கடும் கண்டனத்திற்குறியது.

கோவையில் நடந்த கைவினைக் கலைஞர்களுடனான சந்திப்பில், நமது பாரதப்பிரதமர் நரேந்திரமோடி அவர்களும், நமது பாஜகவும் இந்தியக் கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை எவ்வாறு பாராட்டி போற்றுகிறார்கள் என்பதையும், நமது மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் “விஸ்வகர்மா” என்ற திட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டை ஊக்குவிப்பதைப் பற்றியும், அதே சமயம் திமுக தனது அரசியல் ஆதாயங்களுக்காக அத்திட்டத்தின் பலன்கள் தமிழக கைவினைஞர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதைப் பற்றியும் மட்டும்தான் எனது உரையாடல் இருந்தது. 

அதில் “விஸ்வகர்மா திட்டத்தில் இணைந்தால், விஸ்வகர்மா என்ற சாதிப் பெயரில் நாங்கள் அடைபட்டுவிடுவோம், இதனால் எங்கள் சமுதாயம் பாதிப்படையும்” என்ற அச்சமுதாய மக்களின் கோரிக்கைகளுக்கு நான் அளித்த விளக்கத்தில் இருந்து ஒரு பாதியை மட்டும் வெட்டி எடுத்து வழக்கம் போல பொய் அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள். 

அனைத்திலும் சாதி முலாம் பூசி அரசியல் செய்யும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், விவசாயத்தைக் குலத்தொழிலாக கொண்டு வழக்கறிஞர் துறையை எனது தொழிலாக தேர்ந்தெடுத்த நான், குலத்தொழில் முறையை ஆதரித்து பேசியது போன்ற ஒரு மாயையை உருவாக்க முயல்வது சற்றும் ஏற்புடையதல்ல.

தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் இத்திட்டத்தின் பலன்களைத் தமிழக மக்களுக்கு கிடைக்கவிடாமல் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கும் திமுக, எங்கே தமிழக மக்களுக்கு உண்மை தெரிந்து நம்மை கேள்வி கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் எனது பேச்சை மடை மாற்றி சாதிய வன்மத்தை தூண்ட முயற்சிக்கிறது.

காரணம், விவசாய குடும்பத்தை சார்ந்த எனக்கு தமிழக சட்டமன்ற உறுப்பினராவதற்கான வாய்ப்பினை நல்கியதே, பாஜகவை குலத்தொழிலை மட்டும்தான் ஒருவர் செய்ய வேண்டும் என ஒருநாளும் வற்புறுத்துவதில்லை என்பதற்கான சிறந்த உதாரணம்.

எனவே, காலங்காலமாக சாதியையும் மதத்தையும் வைத்து மக்களைப் பிளவுண்டு அரசியல் செய்யும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், நமது தேசத்தின் பொக்கிஷங்களான பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் முன்னேற்றத்திலும் அதே உத்தியைக் கடைபிடிக்க வேண்டாம் என்றும், நீங்கள் எவ்வளவுதான் பொய் பிரச்சாரத்தை பரப்பினாலும் உண்மையை மக்களுக்கு நாங்கள் எடுத்துரைப்போம்" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi Srinivasan condemn to DMK Mk Stalin Udhay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->