கமலின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது: வானதி சீனிவாசன் கடும் காட்டம்! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தி.மு.க கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் எந்த ஒரு தொகுதியும் ஒதுக்கவில்லை. 

மாநிலங்களவையில் மட்டும் ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் கமலஹாசனுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, 

ஏற்கனவே கமலஹாசன் சட்டமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்டபோது பொதுமக்கள் அணுக முடியாத அளவுக்கு தான் இருந்தார். 

இப்போது மீண்டும் போட்டியிடும் மன நிலையில் இருந்து மாறியுள்ளார். அவர் போட்டியிடாதது எங்களுக்கு ஏமாற்றம் தான். தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவேன் என சொல்லி வந்த கமலஹாசன் தனது அரசியல் பயணத்தில் எந்த கட்சியை விமர்சித்தாரோ அந்த கட்சியுடன் தற்போது கூட்டணியில் உள்ளார். 

வேட்பாளராக மக்களிடம் பேச முடியாத அவர் பிரசாரத்திற்கு வந்து மட்டும் என்ன பயன். அரசியல் ஆசைக்காக இந்த பதவியை எடுத்துள்ளார். 

நட்சத்திர பேச்சாளரான கமலஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி விலை அவ்வளவுதான். கோவை தெற்கு தொகுதியில் தோல்வி அடைந்திருந்தாலும் மீண்டும் அந்த மக்களை சந்தித்திருக்கலாம். இப்பொது அவரது அரசியல் சாயம் வெளுத்து விட்டது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi Srinivasan indictment Kamal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->