இந்து அறநிலையத்துறை வருமானத்தை இந்துக்களுக்கு மட்டும் செலவழிக்க தமிழக அரசு ஒத்துக்கொள்ளுமா? கனிமொழிக்கு வானதி சீனிவாசன் பதிலடி! - Seithipunal
Seithipunal


மக்களவையில் இன்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மத சுதந்திரத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தலையிடுகிறது என்ற திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். 

மேலும், இன்று மிகவும் சோகமான நாள். மசோதா சிறுபான்மையினர் மீதான தாக்குதல். முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினராக நியமிப்பது நியாயமா ?

மத சுதந்திரத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தலையிடுகிறது. நாட்டு மக்கள் இடையே பிரிவை ஏற்படுத்தும் முயற்சி

குறிப்பிட்ட மதம், சமுதாயத்தினரை குறி வைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு முற்றிலும் எதிரான மசோதா என்று கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.

கனிமொழியின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், இஸ்லாமியர்கள் இந்து கோவில்களை நிர்வகிக்க அனுமதிப்பீர்களா? வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக கனிமொழி! 

அப்போது இந்து அறநிலையத்துறை வருமானத்தை இந்துக்களுக்கு மட்டும் செலவழிக்க தமிழக அரசு ஒத்துக்கொள்ளுமா? 

மேலும் இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூட தெரிவிக்காத முடியாத முதல்வர் ஏன் இந்து அறநிலைய துறையை எவ்வாறு நிர்வகிக்கலாம்! 

இல்லை என்றால் வாக்பு வாரிய சொத்துக்களை அரசே நிர்வகிக்கட்டும் அதில் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா? என்று கனிமொழிக்கு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi srinivasan reply to kanimozhi dmk vs bjp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->