#BB6 : பிக்பாஸூக்கா ஓட்டு கேட்டு விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட்.. வனிதா விஜயகுமார் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி துவங்கியது. இந்த 6-வது சீசனையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து சாந்தி, ஷெரினா, அசல் கோளாறு, நிவாஷினி, மகேஸ்வரி, குயின்சி, ராபர்ட் மாஸ்டர், ஜனனி, ராம் ராமசாமி, ஆயிஷா, தனலட்சுமி மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் இதுவரை வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.ஜி பி முத்து தானாகவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். 

இந்த நிலையில் இந்த வாரத்தில் டிக்கெட் 2 ஃபைனல் நடந்தது. இதில் அனைத்து சுற்றுகளிலும் அமுதவாணன் சிறப்பாக செயல்பட்டு வெற்றியடைந்தார். இதன் மூலம் அவர் அடுத்த இருவார நாமினேஷனில் இருந்து தப்பித்துவிட்டார். நேரடியாக இறுதி வாரத்தில் அமுதவாணன் நுழைந்துள்ளார்.

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே ஃபைனலிஸ்ட்டுகளாக உள்ளனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏடிகே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் விஜே கதிரவன் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூ.3 லட்சம் ரூபாயுடன் வெளியேறினார். 

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஷிவின், விக்ரமன், நந்தினி, அசீம் மற்றும் அமுதவாணன் உள்ளனர். இதில், விசிக கட்சியை சேர்ந்த விக்ரமனுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ' தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் @DisneyPlusID app மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம்' என பதிவிட்டுள்ளார். தற்போது இது குறித்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார்  விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் 'இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.. இது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட்.. ஒரு மரியாதைக்குரிய அரசியல் தலைவரும், பதவியில் இருக்கும் எம்.பி.யும், ரியாலிட்டி ஷோவில் போட்டியிடும் போட்டியாளருக்கு வாக்களிக்க தனது உறுப்பினர்களை எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும்' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanitha Vijayakumar tweet reply to thirumavalavan bigg Boss 6


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->