#BigBreaking || பெரும் அதிர்ச்சி செய்தி., குரூப் கேப்டன் விமானி வருண் சிங் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.!
VARUN SINGH DEAD
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே, காட்டேரி மலைப்பாதையில், நஞ்சப்ப சத்திரம் கிராம பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நேற்று நடைபெற்றது. இதில், இந்திய ராணுவப் படையின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியாகினர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த விமானி வருண் சிங்கிற்கு, குன்னூர் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
விபத்து நடந்த பகுதியில் இருந்து மீட்டு வரும் போது வரும் பொழுது அவருக்கு 80 - 85 சதவீத தீக்காயங்கள் இருந்ததாக மருத்துவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவரது உடல்நிலை மோசமாக இருந்தாலும், அவரின் உடல் பாகங்கள் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இதனையடுத்து, குரூப் கேப்டன் விமானி வருண் சிங்கை உயர் சிகிச்சைக்காக பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், சற்றுமுன் குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று விமானப்படை அறிவித்துள்ளது.