விசிக-விலிருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் - திருமாவளவன் அறிவிப்பு!
Vck aadhav Arjuna suspension thirumavalavan DMK mkstalin
திமுக ஆட்சியை மன்னர் ஆட்சி என்றும், இந்த ஆட்சியை 2026 தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று பேசிய விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியிலிருந்து ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவுள்ளார்.
இதுகுறித்து அவரின் அந்த அறிவிப்பில், "கட்சியின் துணை அண்மைக் பொதுச்செயலாளர் திரு.ஆதவ்அர்ஜுனா அவர்கள் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்தது.
இது குறித்து கடந்த 7-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள்,மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீரமானிக்கப்பட்டது.
அதன்படி, திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்று திருமாளவன் தெரிவித்துள்ளார்.
English Summary
Vck aadhav Arjuna suspension thirumavalavan DMK mkstalin