ஆதவ் அர்ஜுனாவின் கருத்து விசிக கருத்து அல்ல - திருமாவளவன் பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், விசிக-வின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாகவே கடுமையாக விமர்சித்தார்.  

அவர் குறிப்பாக, "தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. இந்த மன்னர் ஆட்சியை 2026 தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்டால் 'சங்கி' என்கிறார்கள். தமிழகத்தில் பிறப்பால் மற்றொரு முதலமைச்சர் வரக்கூடாது" என்று தெரிவித்தார்.  

மேலும், "திரைத்துறையில் இருந்து (நடிகர் விஜய்) யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்கள். ஆனால், அரசியலில் இருந்து கொண்டு, தமிழ் திரையுலகை தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர்" என்று கூறி, திமுகவை மறைமுகமாக அல்ல, நேரடியாகவே கடுமையாக விமர்சித்தார்.  

இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்க திருமாவளவன், "ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. ஆதவ் அர்ஜுனா கருத்துக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுக கூட்டணியிலேயே விடுதலை சிறுத்தை கட்சி நீடிக்கிறது.

திமுக கூட்டணியில் தான் தொடர்வோம், தொடர்கிறோம். விஜய் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணிக்கு கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா பேசி இருப்பது உண்மை. இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்போம். 

பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுப்போம். தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கும் எங்களுக்கும் இடையே எந்த சிக்கலும் இல்லை" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Aadhav Arjuna Thirumavalavan DMK TVK Vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->